Powered By Blogger

Monday, November 19, 2018

கூந்தல் நீளமாகவும், ஆரோக்கியமாகவும்,பளபளப்பாகவும் இறுக்க வழிமுறைகள்

கூந்தல் எப்பொழுதும்  கறுமையாக நீளமாக வளர நாம் செய்ய வேண்டிய வழிகள்.







   கூந்தல் வளர்வது பற்றி முதலில் நாம் அறிந்து கொல்ல வேண்டிய முக்கியமான மூன்று நிலைகள்,






1.  அனஜென் ( Anagen )
2.  கெட்டோஜென்( Catagen )
3.  டேலொஜென் ( Telogen )



1. அனஜென் ( Anagen )


     இது முடி வளர்ச்சியின் முதல் நிலை, இந்நிலையில் நமது கூந்தல் நன்கு வளரும் நிலை. இந்நிலை 2 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள காலம் ஆகும். இந்நிலையில்தான் இறந்த செல் வெளியே வரும் மற்றும் புதிய முடி முளைக்க ஆரம்பிக்கும் மேலும் வேர் பகுதிக்கு ரத்தம்  நன்கு பயும் இதானல் முடி நன்கு வளரும், அரை இன்ச் வரை வளரும்,  முடியின் வேர் 85% வரை வளரும் நிலை இந்த அனஜென் பருவத்தில் தான்.



2. கெட்டோஜென்( Catagen )


     இது முடி வளர்ச்சியின் இரண்டாம்  நிலை, இந்நிலை நமது முடியின் வளர்ச்சி முற்றிலும் நின்று விடும். மேலும் முடி உடைவது, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏர்படும்,இந்நிலை 1 மாதம் வரை மட்டுமே இருக்கும், முடி உதிர்வது மிக குறைவு 1% முடி மட்டுமே உதிரும்.முடிக்கு செல்லும் ரத்தம் தடை பட்டு விடும்.



3. டேலொஜென் ( Telogen )


     இது முடி வளர்ச்சியின் மூன்றாம் நிலை மற்றும் இறுதி நிலை ஆகும், தற்பொழுது நன்கு முற்றிலும் வளர்ச்சியடைந்த முடி உதிரும் நிலை, இந்த நிலை 3 மாதம் வரை இருக்கும் ஒரு முறை உதிரும் முடி மறுபடியும் முதல் நிலையான அனஜென் பருவத்தில் தான் மறுபடியும் வளரும்.


நமது வாழ்நாளில் மொத்தமாக 25 முறை இந்த சுழற்சி நடைபெறும்.இதில்
அனஜென் ( Anagen ) எனும் முதல் சுழற்சியில் 80% முடி வளர்ச்சியும்,டேலொஜென் ( Telogen ) எனும் மூன்றாம் நிலையில் 20% முடி உதிர்வடயும். மேலும் முடி வளர்வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையும் தீர்மானிக்கும்.
வாரத்திற்கு ஒருமுறை நல்ல எண்ணெய் மசாஜ் செய்து மிருதுவான சாம்பூ கொண்டு அலசி வர முடி பொடுகு தொல்லை நீங்கி முடி நன்கு வளரும்.

உடல் சூடு அதிகமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது வாரத்திற்கு இருமுறை வெள்ளரி, மோர், இளநீர் அருந்துவதால் பொட்டாசியம் அளவு அதிகறிப்பதொடு உடல் சூடு குறயும்.



ஹார்மோன்



     நமது ஹார்மோனில் உள்ள சக்கரை,தைராய்டு போன்ற நோய்க்கும் முடி வளர்ச்சிக்கு உதிர்வதுக்கும் தொடர்பு உள்ளது.



மசாஜ்




     தினமும் தலை மசாஜ் செய்வது முடிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது, மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லஏண்ணை கொண்டு முடி வேர் முதல் நுனி வரை மெதுவாக மசாஜ் செய்யவும்.



உணவு




     உணவு முடி வளச்சிக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது நமது உணவில் புரதம், மினரல்,பொட்டாசியம் போன்றவை முக்கியம், மீன்,பேரிச்சை, இளநீர், இறைச்சி, கீரை, பச்சை காய்கறி ஆகியவை முடி வளச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
தண்ணீர் முடி வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது. நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியமானது, தண்ணீர் உடல் வளர்ச்சி மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது,



மரபு




     முடி உதிர்வதர்கு மரபணு ஒரு காரணமாக உள்ளது இதனை சரி செய்வது  கடினம்



மன அழுத்தம் 




     முடி உதிர்வதர்க்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது இன்றைய காலகட்டத்தில் நாம் இயந்திர வாழ்க்கை  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நாம் பல்வேறு வழியில் மன அழுத்ததிற்கு ஆழகிறோம். மன அழுத்தம் குறைய யோக, தியானம், போன்றவற்றில் ஈடுபட்டு முடி உதிர்வதை குறைத்தது கொள்ளலாம்.


No comments:

Post a Comment

7 நாட்களில் முகம் எப்பொழுதும் பளபலப்பாகவும் இளமையாகவும் இறுக்க எளிய வழிமுறைகள்.

எப்போதும் முகம் பளபலப்பாகவும் இளமையாகவும் இறுக்க எளிய வழிமுறைகள்.